இலங்கைக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதன்படி, ஒகஸ்ட் மாதம் முதல் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதி ஒரு குறிப்பிட்ட வரிசையில் முன்னெடுக்கப்படுமு் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள், பிற போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பதிலீடுகள், சாதாரண வாகன இறக்குமதியின் பின்னர் சொகுசு வாகனங்கள் ஆகியவற்றிற்கு இறக்குமதி அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளதுஇ
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு கடந்த 04 ஆம் திகதி கூடியது. ஒரு மாதத்திற்குள் அல்லது ஒகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குள் தமது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இதற்கமையஇ வாகன இறக்குமதியை எவ்வித பிரச்சினையும் இன்றி மீள ஆரம்பிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் நம்புகின்றது’ என்றார்.
சாதாரண மக்களும் வாகனங்களை இறக்குமதி செய்யும் வகையில் வாகன இறக்குமதியை மிகவும் பொருத்தமான முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.