சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் படத்தில் வர்மக்கலை தொடர்பான தனது தனது முத்திரை பயன்படுத்தப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியன் 2 திரைப்படத்தில் தனது பெயரை சேர்க்க வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வர்மக்கலை மற்றும் தற்காப்புக்கலை அகாடமி ஆசான் படத்திற்கு தடைகோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணையில் சங்கர், கமல் ஹாசன், பட தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
சங்கர் சார்பில் ஆஜரான வழக்கிறஞர் இந்த படத்திற்காக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பணியாளர்கள் வேலை செய்துள்ளனர்.
வெளி மாநிலம், வெளிநாடு என பல்வேறு இடங்களில் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தை தடைசெய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்,பண இழப்பீடு ஏற்படும் எனக் குறிப்பிட்டது. பின்னர் நீதிதிமன்றம் தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.