NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாற்றுத்திறனாளிகளுக்கு முதன் முறையாக வாக்களிக்க சந்தர்ப்பம்!

பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு, முதன் முறையாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பார்வையற்ற சமூகத்தினர் பிரெய்லி முறையில் (பார்வையற்றவர்களுக்கானஎழுத்து முறைமை) வாக்குச் சீட்டின் அடையாளங்களை கண்டறியும் வகையில் விசேட முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு சைகை மொழியில் வாக்குச் சீட்டு குறித்து அறிவிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலங்களில் முன்னோடித் திட்டங்கள் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு அந்த வெற்றியின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கும் அதே வசதிகள் வழங்கப்படவுள்ளன.

விசேட தேவையுடையோர் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்கும் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் கிராம அலுவலர்கள் மூலம் அடையாளங்காணப்பட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles