நாட்டில் பாடசாலை செல்ல வேண்டிய வயதிலுள்ள பிள்ளைகளில் 40 வீத பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை P.D. சிறிசேன மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், இரண்டு மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் எந்தப் பிள்ளைக்கு கல்வி புகட்டுவது எனும் கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 20 வீதமாக பிள்ளளைகள் பிறரிடம் உடைகளை பெற்ற அணிகின்றனர் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.