NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு

நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் மொத்தமாக 4இ380 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்இ ஆயிரத்து 332 வரையான சிறுவர்கள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையுடையவர்களாக இருப்பதாகவும்இ ஆயிரத்து 16 சிறுவர்கள் கொடுமைக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்இ 787 சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை 290 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் 70 சிறுவர்கள் தொடர்பில் புறக்கணிப்பு அல்லது கொடுமைக்குள்ளாகுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடள் காயம் ஏற்படுத்தியது தொடர்பில் 90 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மேலும்இ கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 157 முறைப்பாடுகளும்இ கடுமையான காயங்களை ஏற்படுத்துவது தொடர்பில் 119 முறைப்பாடுகளும் சிறுவர்களை யாசகத்துக்காக பயன்படுத்துவது தொடர்பில் 121 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles