நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தங்களுக்கு விருப்பமான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) ஊடகங்களின் செய்திப் பிரிவின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பல கடினமான முடிவுகளை எடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.