எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை கட்சி ஆதரவாளர்களின் கோரிக்கைக்கமைய தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.