NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன..!

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் சபைக்கு அறிவித்தார்.

அதற்கமைய குறித்த சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமாக 2024 ஆகஸ்ட் 08 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் 2024 மே 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

Share:

Related Articles