NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈராக்கில் சிறுமிகளுக்கு திருமணம் – சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டம்

ஈராக்கில் பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டமூலம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த மசோதா சட்டத்திற்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles