பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது.
இதன்படி, சீனா 32 தங்கம், 25 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 77 பதக்கங்களை பெற்றுள்ளது.
அமெரிக்கா இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 104 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 47 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.