திருக்கோணேஸ்வர ஆலயத்தில் சோழர் காலம் முதல் பல நூறு வருட காலமாக இருந்த தாலி கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.
குறித்த தாலியானது போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்வம் குறித்து மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர்,பொலிஸாருக்கு பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.