மன்னார் தெற்கே, வடமேற்கு கடற்பகுதியின் குதிரைமலை முனையில் இலங்கை கடற்படையினரினால் நேற்று(12) இரவு முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் களின் படகில் 80 உரைகளில் சுமார் 2689 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரும் பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை கற்பிட்டி விஜய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வடமேல் மாகான கலால்வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மூவரையும் இன்று(13) புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வருடம் இதுவரையிலும் 37, 619 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.