NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் மீண்டும் வெடிகுண்டு எச்சரிக்கை!

கனடாவில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யூத மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், வர்த்தக மையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீதே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு நாடு முழுவதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அச்சுறுத்தல் விடும் நபர்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணைகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles