NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் பன்றி தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 15ஆம் வட்டாரம் பகுதியில் பன்றியின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப பெண்ணொருவர் நேற்று சனிக்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.

80 வயதுடைய நாகமுத்தன் இலட்சுமி என்ற வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவர் பன்றிகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வயோதிப பெண் தனது வீட்டுக்கு அருகில் நின்றிருந்த வேளை அயல் வீட்டில் வளர்த்த பன்றி அவரை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த குறித்த வயோதிப பெண் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles