இந்தோனேஷியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தோனேசியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்கள், மலைப்பகுதிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளுக்கு அருகே வசிப்பதால், பேரிடர் காலங்களில் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் அதிகமாக காணப்படுகிறது .கடந்த மே மாதம், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.