NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதக்கங்களை குவித்த இலங்கை வீரர்கள்…!

20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் அவர் முடித்துள்ளார்.இப்போட்டியில் பந்தயத்தை 2 நிமிடம் 12 வினாடிகள் நிறைவு செய்த இலங்கையின் சன்சலா ஹிமாஷானி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.இதேவேளை, ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சவிது அவிஷ்காவும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.போட்டியை 1 நிமிடம், 49 வினாடிகளில் அவர் முடித்துள்ளார்.

போட்டியின் ஆரம்பம் முதலே இரண்டு இந்திய வீரர்களும் சவிதுவுக்கு சவாலாக இருந்த போதிலும், போட்டியின் கடைசி சில மீற்றர்களில் சவிது போட்டியின் முடிவை மாற்றியமைத்து இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.இதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஷனெலா செனவிரத்னே வெண்கலப் பதக்கத்தை வென்றார்.போட்டியை 12 வினாடிகள் வினாடிகளில் முடித்துள்ளார்.

இங்கு நான்காவது இடத்தை இலங்கையின் தனானி ரஷ்மா வென்றார்.இதற்கிடையில், ஆடவருக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியும் இடம்பெற்றது, அங்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெரோன் விஜேசிங்க மற்றும் தினேத் இந்துவர ஆகியோர் களம் இறங்கினர்.மெரோன் விஜேசிங்க பந்தயத்தை 10 வினாடிகள் முடித்ததன் மூலம் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தை வென்றெடுக்க முடிந்தது.இங்கு வெள்ளிப் பதக்கத்தை இலங்கையின் தினேத் இந்துவார வென்றார்.அவர் பந்தயத்தை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 10 வினாடிகள் ஆகும்.இந்தப் போட்டி சென்னையில் நடைபெற்றுவருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles