சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படும் எனக் கணிப்பிட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தை விடவும் அதிகமாகப் பதிவாகும் எனத் தங்களது தரப்பு மதிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில் மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.