NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாக செட்கண் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த ஒருவர் கைது..!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்து மிருகவேட்டையாடிவரும் 54 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ். ஆப்தீன் தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு விநாயகபுரம் 4ம் பிரிவிலுள்ள காயத்திரிகிராமம் பகுதியிலுள்ள குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது பாவிக்க கூடிய செட்கண் ரக துப்பாக்கியின்  5 ரவைகளையும் வெறுமையான ரவைகள் 3 உட்பட 8 ரவைகளைமீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் காட்டுமிருகங்களை சட்டவிரோத உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கிகளை பாவித்து வேட்டையாடி வருவதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles