வெல்லம்பிட்டி, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 112 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.