NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணைய வழி மோசடிகள் தொடர்பில் இதுவரை 8,000 முறைப்பாடுகள்!

இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 300 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இணையத்தின் ஊடாக பொதுமக்களின் நிதியைத் திட்டமிடப்பட்ட வகையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், இணையவழி ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 200 இற்;கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாட்டில் உள்ள நபர்களிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைதந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles