இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு 1,056 இலட்சம் ரூபாவை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் அற்ற நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







