NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பாரிய மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் போலி செய்திகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

அதன்படி, பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி இணையவழி ஊடாக நன்கொடைகள், ரொக்கப் பரிசுகள், அதிர்ஷ்ட வெற்றிகள், அதிக லாபம் ஈட்டும் பொருட்களை வழங்குதல், காப்பீடு வழங்குதல் ஆகியவற்றிற்காக பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவித்து அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் மற்றும் WhatsApp செய்திகள் ஊடாக OTP கடவுச்சொல் தகவல்களைக் கோரும் செய்திகள் தொடர்பில் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் மேலும் அறிவுறுத்துகிறது.

இந்த இணைய மோசடியாளர்கள் போலி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்எப் செய்திகள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர்கள் பெற்றுத் தரும் லின்க் உள்ளே பிரவேசிப்பதன் ஊடாக சம்பந்தபட்ட நபரின் கணினி, கைப்பேசி தரவுகள் திருடப்படும் மோசடிகள் போன்று நிதிமோசடியும் இடம்பெறுகிறது.

விசேடமாக வட்ஸ்எப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் OTP கடவுச்சொல் தகவலைக் கேட்பதன் மூலம் குற்றவாளிகள் உங்கள் WhatsApp கணக்கைக் கட்டுப்படுத்துவார்கள் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles