தேசிய மக்கள் சக்தி சறுக்க ஆரம்பித்துவிட்டதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாகத் தேசிய மக்கள் சக்தி தமது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்ததுடன், அந்த கட்சியின் பல்வேறு நிகழ்வுகளிலும் தீர்மானங்களை எடுத்திருந்தது.
அவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் தருணத்தில் நானும் அந்த இடத்திலிருந்தேன். ஆனால் இப்போது அந்த சட்டத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை என்றும் அதனால் அதனை மாற்ற வேண்டியதில்லை என்றும், ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை பணிப்பாளர் J.M..விஜய பண்டார தெரிவித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் M.A.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான பிமல் ரத்நாயக்க, பயங்கரவாத தடைச் சட்டமூலத்தில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.