பலமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றில் நுழைவதற்கான அடித்தளத்தை தமது கட்சி இட்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் மகேஷி மதுசங்கா தெரிவித்துள்ளார்.
திருடனைப் பார்த்து திருடன் என தைரியமாக கூறிய தமது தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வருகையையிட்டு, நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர், உண்மையை பேச இப்படியான ஒரு தலைவர்; நாட்டுக்கு தேவைப்படுகிறார். பலமானதொரு எதிர்க்கட்சியாக அமர்வதற்கும் இப்படியான தலைவரின் தேவை அவசியமாகிறது.
எமது அணியில் இளைஞர்கள் பலர் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள். மக்களின் சரியான பிரச்சினையை இணங்கண்டு, அந்தப் பிரச்சினையை தீர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறோம். பாராளுமன்றுக்கு அதிகமாக பெண் பிரதிநிதிகள் வர வேண்டும்.
அத்துடன், அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பலமானதொரு எதிர்க்கட்சியொன்று தேவையாகும் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் மகேஷி மதுசங்கா மேலும் தெரிவித்துள்ளார்.