NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பதுளை, காலி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்;த நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறும் சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையின் போது அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் அதிவேக வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப்பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் P.ஊ.குணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Share:

Related Articles