2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் உரிய அறிவுறுத்தல்களின்படி தங்கள் விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கான விண்ணப்பத்தை தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியும், தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.னழநநெவள.டம அல்லது றறற.ழடெiநெநஒயஅள.பழஎ.டம இல் இது தொடர்பான அறிவுறுத்தல்களை படித்து அதற்கேற்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.