NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த வைத்தியர் மொஹமட் ஷாபி..!

வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று (07) பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் நோக்கில், திட்டமிடப்பட்ட சதித்திட்டமாக போலியான அறிக்கையை வௌியிட்டு தன்னை கைது செய்து துன்புறுத்திமைக்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

5 ஆண்டுகள் 6 மாதங்கள். இயன்றவரை தன்னை துன்புறுத்தினார்கள். நேற்று விடுதலையானது நான் இல்லை, நீதிக்காக நின்றவர்கள் அனைவரும்தான். இந்த தவறு வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க நான் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. எனக்கு எதிராக செயல்பட்ட அனைவரின் சார்பிலும் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளேன். என்னை கைது செய்ததன் பின்னரே முறைப்பாடுகளை தேடிச் சென்றனர். எனக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்தனர்.” என வைத்தியர் மொஹமட் ஷாபி தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles