NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் சோதனைகள் தீவிரம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 2,800க்கும் மேற்பட்ட அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக, அதன் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 425 இடங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரிசி விலை காட்டப்படாமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,060 ஆகும்.

அத்துடன், அரிசி இருப்புக்களை மறைத்தமை தொடர்பில் 240 வழக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக, வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் குறிப்பிட்டார்.

இதன் தரவுகளை ஆய்வு செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles