NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊடகங்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு அவதானிக்கும் – கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர்

தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களால் அவதானிக்கப்படும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ரஷ்யா, பங்களாதேஷ், இந்தியா, மாலைத்தீவு, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 10 பேர் கொண்ட சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் இதுவரையில் சிறப்பான முறையில் காணப்படுவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் மிக அமைதியாக இடம்பெற்றதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது பணிகள் தொடர்பிலான விளக்கங்களையும் தேர்தல் நடைமுறை கண்காணிப்பு தொடர்பிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி இதன்போது மேலதிக தகவல்களை வழங்கினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் சமூக அமைப்புகள், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் அடிப்படையில் இதுவரையில் தேர்தல் செயற்பாடுகள் சிறப்பாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை நாம் அறிந்து கொண்டோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலை போன்று அமைதியான முறையில் தற்போது இடம்பெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலும் அவ்வாறு இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இங்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினால் தேர்தலுக்கு முதல் நாள், தேர்தல் தினத்தன்று,, வாக்கு எண்ணும் பணி மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தினம் ஆகிய நான்கு விடயங்களையும் கண்காணிப்பு செய்யவுள்ளோம்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள எமது சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினால் நுவரெலியா, யாழ்பாணம், பதுளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை, மாத்தளை பொலன்னறுவை, கொழும்பு மற்றும் மாத்தறை போன்ற 10 பிரதேசங்களில் தமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

தேர்தல் நடவடிக்கையின் போது வாக்காளர்களின் செயற்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயற்பாடுகள், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களிள் செயற்பாடுகள் போன்றவை தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேற்கூரிய விடயங்களை தொகுத்து ஆராய்ந்து தேர்தல் நிறைவடைந்த பின்பு தேர்தல் தொடர்பிலான எமது அறிக்கையினை வெளியிடுவதுடன் தொடர்ந்தும் தேர்தல் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதோடு வாக்களிக்கும் நடவடிக்கைகளும் சிறப்பாக இடம்பெறவேண்டும் என கேம்பிரிஜ் அமைப்பின் தலைவர் நாசிம் சைடி மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles