நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சுவர் இடிந்து விழுந்ததில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.