புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
டிசம்பர் 3ஆம் திகதி முதல் பாராளுமன்ற வாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதத்தை நடாத்தவும் அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
“கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதே அந்த இரண்டு நாட்களின் முக்கிய நோக்கமாகும்”
டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான பிரேரணையை விவாதித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டது.
அந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஊடாக, 2025 ஏப்ரல் 30ஆம் திகதி வரை அரசாங்கத்தின் அலுவல்களை நடத்த தேவையான நிதி அதன் மூலம் ஒதுக்கப்படவுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்வதை எதிர்பார்க்கவில்லை என கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.