கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் 23 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நடுத்தர அளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அநுராதபுரம், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை 50 வீதத்தை தாண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையால், திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி சூரியகுமார் விளக்கமளிக்கையில்,
WEATHER 26.11.2024