வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பகுதியில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.