அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரஜை மாடியில் இருந்து குதித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.