இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.