NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக அளவில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பெண்…

சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன துறையில் ஈடுபட்டுவருபவர்கள் ஆர்வத்துடனும் சிறப்பாகவும் இத்துறையில் ஈடுபட்டால், சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி தாங்களும் ஒரு சாதனையாளர்களாக வரமுடியுமென கம்போடியாவில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி இலங்கை சார்பாக மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட அனிதா விநாயக காந்தன் தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் சிகையலங்காரம் மற்றும் அழகுசாதன(APHCA) போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தை கோல்ட் கிரிக்கட் கிளப்பில் இன்றைய தினம் நடைபெற்ற போது
மணப்பெண் மற்றும் சிகையலங்கார முக ஒப்பனையில் கலந்துகொண்டு மூன்றாமிடத்தைப் பெற்ற யாழ் மல்லாகத்தைச் சேர்ந்த அனிதா விநாயக காந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் “ஆசிய பசுபிக் சிகையலங்காரம் மற்றும் அழகுசாதனதுறை (அப்கா-APHCA)”
தலைவர் சஹான் குணசேகர மற்றும் செயலாளர் ஹசினி குணசேகர அவர்களுடன் நடுவராக பங்காற்றிய ஹேமி விஜயசிங்கம் ஆகியோர்களும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இச்சர்வதேச இப்போட்டியானது கம்போடியாவில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் மணப்பெண் மற்றும் சிகையலங்கார துறையில் ஈடுபட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த அனிதா விநாயககாந்தன், யமுனா நடராஜா, புஸ்பலதா விஜயரங்கர், நிதர்ஷனா திலக்ஷன், சுலக்ஷனா வோல்டன் சஞ்சீவன், சசிகலா தம்பிராஜா மற்றும் சிவகுமாரி சுமன்ராஜ் ஆகிய சிறந்த ஏழு பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் 17 நாடுகள் பங்குபற்றிய நிலையில் இலங்கைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

இதேவேளை கம்போடியாவில் நடைபெற்ற இச்சர்வதேச போட்டியில் முதலாமிடத்தை கம்போடியாவும் இரண்டாமிடத்தை தாய்வானும் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles