இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டிற்கு வருகைத்தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18, 28, 831 என அந்த அதிகாரசபை கூறுகின்றது.
அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 23 ஆயிரத்து 958 சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.