இலங்கையின் பத்தாவது பாராளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்த சர்ச்சை தொடர்ந்தும் நீடித்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு பட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற இணைய தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னாள் கலாநிதி என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் அண்மைய நாட்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.