NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில்  சிறுவர் அபிவிருத்தி  குழுக்கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட   சிறுவர் அபிவிருத்தி குழுவின் 4 ஆவது காலாண்டுக்குரிய குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன. 

1.பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி மாலை வேளையில் பயணிக்கும்  யாழ்ப்பாணம் – உசன் வரையான இலங்கை போக்குவரத்து சேவையினை  கெற்பேலி வரையில் நீடிப்பு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கமைய, அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபையினருக்கு அரசாங்க அதிபர் அறிவுறுத்தினார்.

2.மாணவர்களின் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அரசாங்க அதிபர்  அவர்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கினார். 

3.முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 09 கீழ்ப்பட்ட வகுப்புகளை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுமையாகவும் மாணவர்களின் இணை பாடவிதானச் செயற்பாடுகளுக்காக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை உரிய கல்வி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துமாறும்  கேட்டுக்கொண்டார். 

மேலும்  போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் மற்றும் மாவட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற 21 சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாகவும் அதற்காக  எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 

இக் கலந்துரையாடலில், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர்  மேம்பாட்டு   உத்தியோகத்தர்கள்  , சிறுவர் நன்னடத்தை  உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles