தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100 ஆவது கிலோமீற்றரில் கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பகுதியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்து சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.