NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் பரவிய மர்ம காய்ச்சல் எலி காய்ச்சல் என உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமாக காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் இருவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாகிய 7 மரணங்களில் இருவர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.

உயிரிழந்தோரில் 6 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவராவார்.

இது குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவைச் சேர்ந்த வைத்திய குழு இன்று(12) யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் மாதிரிகள் கொழும்பு மற்றும் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles