லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில், சில மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிசார் பின்னர், காலை பத்து முப்பது மணியளவில் அவரை அந்த இடத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் குறித்த சந்தேக நபர் பணத்திற்காக போட்டிகளை ஏமாற்றுமாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை காவற்துறை – விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
அதன்படி, நேற்று இப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று பல்லேகல பகுதிக்கு சென்ற நிலையில், கண்டி பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை நேற்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.