பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ருஜின புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் தவறான பாதையில் பயணித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாகரிகா புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக சிறப்பு விசாரணையை புகையிரதத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
அதற்மைய, இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் துணைப் பொது மேலாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த புகையிரதங்களுக்கு பதிலாக மாற்று புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.