2025ம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணையை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய முதலாம் தவணை 3 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது.
அதன் முதற் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை இடம்பெறும். முதலாம் தவணையின் 2ம் கட்டம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இடம்பெறும். 3ம் கட்டம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணையானது மே மாதம் 14ம் திகதி முதல் ஓகஸ்ட் 07ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
இறுதி தவணையான மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதுன் அதன் முதற்கட்டம் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 17ம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ம் திகதி வரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.