மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மாகாண மட்டத்தில் பொதுமக்களின் வாய்மொழி மூல கருத்துகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின் கட்டணத்தைக் குறைக்க முடியாது என மின்சார சபை முன்வைத்த யோசனைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில் அளித்துள்ள நிலையில் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 17ஆம் திகதி முதல் இது குறித்து எழுத்துப்பூர்வமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மாகாண மட்டத்தில் உள்ள மின்சார பாவனையாவார்களிடமிருந்து வாய்மொழிமூல ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.