மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான கொங்கோவின் இகியுடர் மாகாணத்திலுள்ள புசிரா ஆற்றில் நேற்று இரவு படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 150க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்கு படகில் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனதில் 78 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.