குருநாகல் – வெல்லவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடொன்றினை இலக்கு வைத்து நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 32 வயதுடைய கணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.