NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுவிஷேச தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் நத்தார் கொண்டாட்டம்…

உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொழும்பு 9 சுவிசேஷ தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் நத்தார் கொண்டாட்டம் நேற்று இரவு தலைமைப் போதகர் – அப்போஸ்தகர் விஷ்வா தலைமையில் கொழும்பு என். எம். பெரேரா கேந்திர நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் போது, ஆரம்ப பிரார்த்தனையுடன் சபையின் இளையோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல், பாடல், சமூக நாடகம் என பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையும் திருச்சபை சிறுவர்கள் மற்றும் இளையோர் குழுவினருக்கான நத்தார் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில் “சுவிசேஷ தரிசன மிஷனரி ஊழியங்கள்” திருச்சபையின் தலைமைப் போதகர் – அப்போஸ்தகர் விஷ்வாவுடன் போதகர் ராதாகிருஷ்ணன் நாயுடு, போதகர் ஜரீனா மற்றும் போதகர் மைக்கேல் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த “சுவிசேஷ தரிசன மிஷனரி ஊழியங்கள்” திருச்சபையின் தலைமைப் போதகர் – அப்போஸ்தகர் விஷ்வா…
இலங்கை நாடு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் வெளிச்சமாகிய அருட் பார்வை கடந்து செல்ல வேண்டும், ஏனெனில் பிரச்சனை என்னும் இருளில் வாழும் மக்களுக்கு இயேசுவின் வெளிச்சம் ஊடாக வாழ்வு வளம் பெற்று மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திப்பதோடு, இலங்கையின் பழைய ஆட்சியாளர்களிடமிருந்து புதிய ஆட்சியாளராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனூடாக நிறைய மாற்றங்களை நாங்கள் பார்க்கிறோம், ஆகவே அவருக்கு ஒத்தாசையாகவும், நாடு மேலும் ஆசிர்வதிக்கப்படுவதற்காகவும், இந்த தேசம் அனைத்து மக்களுடைய ஆசிர்வதிக்கப்பட்ட தேசமாக மாறவும் நாங்கள் இந்த தினத்திலே கர்த்தராகிய ஆண்டவரிடம் வேண்டுகிறோம் என்றார்.

Share:

Related Articles