NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கை..!

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது போக்குவரத்து விதிகளை மீறி தொலை தூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பயணிகள் பஸ்களை சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூர சேவை பஸ்களில் அவர்கள் கணிசமான தூரம் பயணிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பஸ்ஸினை நிறுத்தி சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு அறிவுறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles