NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருட்களின் விலைகளில் இன்று முதல் மாற்றம்?

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருட்களின் விலைகளில் இன்று (31) திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாயினால் குறைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது.

மேலும், மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதுடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles